தமிழ்நாடு

தீபாவளியை முன்னிட்டு டிஜிபி சைலேந்திரபாபு கூறும் அறிவுரை

2nd Nov 2021 01:50 PM

ADVERTISEMENT

 

தீபாவளி பண்டிகையை கொண்டாடும் தமிழக மக்களுக்கு நல்வாழ்த்துகளைத் தெரிவித்திருப்பதோடு, சில அறிவுறுத்தல்களையும் தமிழக காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி சி. சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், தமிழக காவல்துறையின் சார்பாக அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளியை அமைதியாகவும், பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாட, கீழ்காணும் அறிவுரைகளை கடைப்பிடிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

1. கோவிட் வழிகாட்டுதல்களை பின்பற்றி கடை வீதிகள், மார்கெட் பகுதிக்குச் செல்ல வேண்டும். முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.

2. மருத்துவமனை மற்றும் வனவிலங்கு சரணாலயங்கள், பறவைகள் சரணாலயங்கள் அருகில் பட்டாசு வெடிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

3. உச்ச நீதிமன்றம் வழங்கிய அறிவுரைகளின்படி பட்டாசுகள் வெடித்தல் வேண்டும். தடைசெய்யப்பட்ட வெடிகள், ராக்கெட்டுகள் வாங்கக் கூடாது, வெடிக்கவும் கூடாது. இதனால் தீ விபத்துக்கள் தடுக்கப்படும்.

4. பெற்றோர்களின் கண்காணிப்பில் குழந்தைகள் பட்டாசு வெடித்தல் வேண்டும், இதனால் விபத்துக்களைத் தவிர்க்கலாம்.

5. காலை 06 மணி முதல் 07 மணி வரை மற்றும் மாலை 07 மணி முதல் 08 மணி வரை பட்டாசு வெடிக்க வேண்டும்.

6. எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டால் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அவசர உதவி எண் 101 மற்றும் அவசர காவல் உதவி எண்கள் 100 மற்றும் 112 –ல் அழைக்கவும்.

7. வீட்டை பூட்டி வெளியூர் செல்பவர்கள் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தால் காவல் ரோந்து உங்கள் வீட்டிற்கு வருவதை உறுதிப்படுத்த முடியும்.

8. நடு இரவில் வெளியூர் பயணம் மேற்கொள்பவர்கள், அவ்வப்போது ஓய்வு எடுத்து பயணம் மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் சாலை விபத்துக்களை தடுக்கலாம்.

9. இரயில், பேருந்துகளில் பயணம் மேற்கொள்பவர்கள் தங்கள் உடைமைகளை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். இரவு முழுவதும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

10. சந்தேக நபர்களின் நடமாட்டம் இருந்தால் உடனே காவல் துறைக்கு தகவல் தரவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT