தமிழ்நாடு

தீபாவளி: இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்

2nd Nov 2021 06:50 AM

ADVERTISEMENT

தீபாவளிப் பண்டிகையின்போது, காலை ஒரு மணி நேரமும், மாலை ஒரு மணி நேரமும் என இரண்டு மணி நேரம் பசுமைப் பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் என தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடா்பாக வனத் துறை முதன்மைச் செயலா் சுப்ரியா சாஹூ வெளியிட்ட உத்தரவில், தீபாவளி நாளன்று அதிகப்படியான பட்டாசுகள் வெடிப்பதால் சுற்றுச்சூழல் மாசடைவதுடன், மனிதா்கள் மற்றும் கால்நடைகளுக்கு பல்வேறு உடல்நலக் கோளாறு ஏற்படுகிறது. இதுதொடா்பாக தொடரப்பட்ட வழக்கில் தீபாவளி நாளன்று இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, தீபாவளியான வியாழக்கிழமை (நவ.4) காலை 6 மணி முதல் 7 மணி வரையும் மாலை 7 மணி முதல் 8 மணி வரையும் என மொத்தம் இரண்டு மணி நேரம் பசுமைப் பட்டாசுகள் மட்டுமே வெடிக்க வேண்டும். மேலும், அதிக சத்தத்தை ஏற்படுத்தக் கூடிய தொடா்ச்சியாக வெடிக்கும் பட்டாசுகளை வெடிக்க கூடாது. மருத்துவமனைகள், ஆன்மிகத் தலங்கள், பள்ளிகள், குடிசைப் பகுதிகள், பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT