தமிழ்நாடு

வன்னியர் இடஒதுக்கீடு ரத்து: முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

1st Nov 2021 12:19 PM

ADVERTISEMENT

வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இடஒதுக்கீட்டிற்கு எதிராக மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், இடஒதுகீட்டை ரத்து செய்தனர்.

இதையும் படிக்க | வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீட்டை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்

இந்நிலையில், மேல்முறையீடு செய்வது குறித்து முதல்வர் ஸ்டாலின் உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இந்தக் கூட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியும் கலந்து கொண்டுள்ளார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT