தமிழ்நாடு

சென்னையில் பள்ளிகள் திறப்பு

1st Nov 2021 01:13 PM

ADVERTISEMENT

சென்னையில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன.

தமிழகத்தில் கரோனோ பரவல் காரணமாக கடந்த 19 மாதங்களாக பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடைபெறவில்லை. மாறாக ஆன்லைன் மூலமாகவும் கல்வி தொலைக்காட்சி மூலமாகவும் பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன.

இந்த நிலையில் கரோனோ பரவல் சற்று குறந்ததன் காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

ADVERTISEMENT

 இந்த நிலையில் இன்று முதல் 1 முதல் 8 ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் இன்று முதல் தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன. 

அதன்படி சென்னையிலும் 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன.

சென்னை நுங்கம்பக்கம் ராமா தெருவில் உள்ள நடுநிலைப்பள்ளியில் ஆயிரம் விளக்கு சட்டபேரவை உறுப்பினர் டாக்டர் எழிலன் பள்ளிக்கு வந்த குழந்தைகளுக்கு மலர் கொத்துகள், இனிப்புகள் வழங்கினார்.

தொடர்ந்து ஆசிரியர்களுக்கு பொன்னாடை அணிவித்து அவர் வாழ்த்து தெரிவித்தார். 
 

Tags : schools open
ADVERTISEMENT
ADVERTISEMENT