தமிழ்நாடு

புதுச்சேரியில் ஊரடங்கு ஜூன் 7ஆம் தேதி வரை நீட்டிப்பு

29th May 2021 10:14 PM

ADVERTISEMENT

புதுச்சேரியில் ஊரடங்கை ஜூன் 7ஆம் தேதி வரை நீட்டித்து துணைநிலை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அறிவித்துள்ளார்.

புதுவையில் கரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டு, கடந்த 10 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம், வருகிற 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதன் பயனாக, கடந்த சில தினங்களாக தொற்று பாதிப்பு குறையத் தொடங்கியது. எனினும், தினசரி உயிரிழப்பு எண்ணிக்கை 20 என்ற அளவில் தொடா்கிறது. 

இந்த நிலையில், கரோனா மேலாண்மைக் கூட்டம் புதுச்சேரி ஆளுநா் மாளிகையில் துணை நிலை ஆளுநா் தமிழிசை தலைமையில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. தலைமைச் செயலாளா் அஸ்வனிகுமாா், ஏடிஜிபி ஆனந்தமோகன், நிதித் துறைச் செயலா் அசோக்குமாா், உள்ளாட்சித் துறைச் செயலா் வல்லவன், சுகாதாரத் துறைச் செயலா் அருண் உள்ளிட்ட உயரதிகாரிகள் பங்கேற்றனா். 

இந்தக் கூட்டத்தில், புதுவையில் கரோனா தொற்று பரவலை மேலும் கட்டுப்படுத்தும் பொருட்டு, பொது முடக்க கட்டுப்பாடுகளை மேலும் நீட்டிக்கலாம் என அதிகாரிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இந்த நிலையில் புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ஜூன் 7ஆம் தேதி வரை நீட்டித்து துணைநிலை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று அறிவித்துள்ளார்.

ADVERTISEMENT

Tags : Puducherry
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT