தமிழ்நாடு

ஆ.ராசா மனைவி மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

29th May 2021 08:09 PM

ADVERTISEMENT

திமுக எம்பி ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், திமுகவின் துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான ஒன்றிய முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவின் வாழ்விணையர் பரமேஸ்வரி மரணமடைந்த செய்தி அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. 
திராவிடத் தத்துவத்தினை அரசியல்  பாடமாகப் பயின்று பொதுவாழ்வில் ஈடுபட்ட ஆ.ராசாவின் உயர்விலும் - தாழ்விலும், நெருக்கடிகளிலும் - சோதனைகளிலும் தோன்றாத் துணையாக உடனிருந்து அவரது வெற்றிக்குப் பக்கபலமாக இருந்தவர் அம்மையார் பரமேஸ்வரி. அவரது மறைவு ஏற்படுத்தும் பெருந்துயரால் வேதனையில் வாடும் ஆ.ராசாவின் கரங்களைப் பற்றி ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். 
பரமேஸ்வரி அம்மையாரின் பிரிவால் வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் என் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆ.ராசா அவர்கள் இந்தத் துயரில் இருந்து மீண்டெழ, உடன்பிறப்பு என்ற சொல்லுக்கேற்ப கழகம் தோள் கொடுத்துத் துணை நிற்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Tags : DMK MKStalin A Raja
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT