தமிழ்நாடு

குற்றாலம் அருவிகளில் நீடிக்கும் வெள்ளப்பெருக்கு

28th May 2021 04:13 AM

ADVERTISEMENT

 

தென்காசி: தென்காசி மாவட்டம், குற்றாலம் அருவிகளில் இரண்டாவது நாளாக வியாழக்கிழமை வெள்ளப்பெருக்கு நீடித்தது.
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாளிலிருந்தே தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. 
குறிப்பாக, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களின் மேற்குத் தொடர்ச்சி மலையோரப் பகுதிகளில் கன மழையாக கொட்டித்தீர்த்து வருகிறது. 
குற்றாலம் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை பெய்த கனமழையின் காரணமாக குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் புதன்கிழமை அதிகாலை முதல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
அன்றைய தினம் முழுவதும் மழை நீடித்ததால் வியாழக்கிழமையும் அருவிகளில் அதிகளவில் தண்ணீர் விழுந்தது.
பேரருவியில் பாதுகாப்பு வளைவைத் தாண்டியும், ஐந்தருவியில் ஐந்து கிளைகளிலும், பழைய குற்றாலத்தில் நடைபாதை வரையிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. எனினும் புதன்கிழமையைவிட தண்ணீரின் வேகம் சற்று குறைவாகவே இருந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT