தமிழ்நாடு

சென்னையில் மதுபானங்களை டோர் டெலிவரி செய்த சொமேட்டோ ஊழியர் கைது

27th May 2021 12:28 PM

ADVERTISEMENT

சென்னையில் மதுபான பாட்டிலை டோர் டெலிவரி செய்துவந்த சொமேட்டோ ஊழியரை காவல்துறையினர் கைது செய்தனர். 

தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தளரவில்லா முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதேநேரத்தில் மருத்துவம், உணவு டெலிவரி உள்ளிட்ட அத்தியாவசியப் பணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதையும் சிலர் தவறாக பயன்படுத்துகின்றனர் என்பதற்கு உதாரணமாக ஒரு சம்பவம் நடந்துள்ளது. 

சென்னை நியூ ஆவடி சாலை கே.ஜி ரோடு சந்திப்பில் உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமையிலான காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த சொமேட்டோ ஊழியரை வழிமறித்து அடையாள அட்டை கேட்டுள்ளனர். அதற்கு அவர் முன்னும்பின்னுமாக பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் அவர் கொண்டுவந்த உணவுப்பெட்டியை சோதனை செய்தபோது அதில் மதுபான பாட்டில்கள் இருந்துள்ளன. அதனை பறிமுதல் செய்து அந்த நபரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். 

விசாரணையில் அந்த இளைஞர் கோடம்பாக்கத்தைச் சேர்ந்த பிரசன்ன வெங்கடேஷ்(32) என்பது தெரியவந்தது. சொமேட்டோ ஊழியரான இவர் தேவைப்படுவோருக்கு மதுபானம் டோர் டெலிவரி செய்து வந்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

ADVERTISEMENT

Tags : சென்னை
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT