தமிழ்நாடு

தடுப்பூசி உற்பத்தி மையம் குத்தகைக்கு வேண்டும்: பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்

27th May 2021 12:54 PM

ADVERTISEMENT


செங்கல்பட்டில் உள்ள மத்திய அரசின் ஒருங்கிணைந்த தடுப்பூசி உற்பத்தி மையத்தை தமிழகத்திற்கு குத்தகைக்கு வழங்க வேண்டும் என்று பிரதமரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். 

தடுப்பூசி தயாரிக்கும் மையத்தை முழு சுதந்திரத்துடன் தமிழக அரசுக்கு மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். 

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், அதனைக் கட்டுப்படுத்தும் வகையில் செங்கல்பட்டில் உள்ள மத்திய அரசின் ஒருங்கிணைந்த தடுப்பூசி உற்பத்தி மையத்தை தமிழகத்திற்கு குத்தகைக்கு வழங்க வேண்டும்.

ADVERTISEMENT

தமிழக அரசுக்கு கரோனா தடுப்பூசி உற்பத்தி மையம் குத்தகைக்கு வழங்கினால் உடனடியாக உற்பத்தி தொடங்கப்படும். தடுப்பூசி போடும் பணிகளும் விரைவுபடுத்தப்படும் என்றும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமருக்கு முதல்வர் எழுதியுள்ள கடிதம்-விவரம்: இங்கே கிளிக் செய்யவும்

 

Tags : prime minister MK stalin Narendra Modi
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT