தமிழ்நாடு

சென்னையில் டாஸ்மாக் கடை மேலாளர் கருப்பு பூஞ்சை நோய்க்கு பலி

27th May 2021 09:29 AM

ADVERTISEMENT


சென்னை:  கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டு,  சிகிச்சை பெற்று வந்த டாஸ்மாக் கடை மேலாளர் புருஷோத்தமன் உயிரிழந்தாா்.

சென்னை மாம்பாக்கம் டாஸ்மாக் கடையில் மேலாளராக பணியாற்றி வந்தவர் புருஷோத்தமன். இவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்ததில் கருப்பு பூஞ்சை தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

இதையடுத்து அவா் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை புருஷோத்தமன் உயிரிழந்தாா். 

ADVERTISEMENT

Tags : black fungus Chennai
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT