தமிழ்நாடு

பொது ஊரடங்கால் சென்னைக்கு ஏற்பட்ட மிக நல்ல மாற்றம்

27th May 2021 11:43 AM

ADVERTISEMENT


சென்னை: கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் அறிவிக்கப்பட்டிருக்கும் ஊரடங்கால், சென்னையின் காற்று மாசுபாடு சொல்லிக் கொள்ளும் அளவுக்குக் குறைந்துள்ளது.

இரு சக்கர வாகனங்கள் முதல் பேருந்து, லாரிகள் என அனைத்தும் ஊரடங்கிக் கிடப்பதால், சாலைகளில் வாகனப் புகைக் குறைந்துள்ளது. இதன் காரணமாக சென்னையில் காற்று மாசுபாடு அளவு குறைந்துள்ளது.

அதாவது கரோனா வருவதற்கு முன்னதான கடந்த 2019 மே மாதத்தைக்  காட்டிலும் இது மிக அதிகம் என்றாலும், நாடு முழுவதும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டிருந்த 2020 மே மாதத்தைக் காட்டிலும் இது குறைவுதான்.

மே 26-ஆம் தேதி நிலவரப்படி சென்னையில் ஆலந்தூர் மற்றும் வேளச்சேரி பகுதிகளில் எடுக்கப்பட்ட காற்றின் தரக் குறியீட்டு எண் முறையே 47 மற்றும் 73 ஆகக் குறைந்துள்ளதாக மத்திய காற்றுமாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

காற்று தரக் குறியீடு 50க்குள் இருந்தால் மிக நல்லது என்றும், 50 - 100க்குள் இருந்தால் நல்லது என்றும் கருதப்படுகிறது.
 

Tags : chennai lockdown
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT