தமிழ்நாடு

லட்சத்தீவில் ஏன் குண்டர் சட்டம்? ப.சிதம்பரம் கேள்வி

27th May 2021 08:37 PM

ADVERTISEMENT

குற்றங்கள் மிக மிக அரிதான லட்சத்தீவுகளில் மத்திய அரசு குண்டர் சட்டத்தை ஏன் கொண்டு வருகிறது? என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது சுட்டுரையில், குற்றங்கள் மிக மிக அரிதான லட்சத்தீவுகளில் மத்திய அரசு குண்டர் சட்டத்தை ஏன் கொண்டு வருகிறது?

அந்தத் தீவுகளில் வாழ்கின்ற சிறுபான்மைப் பிரிவு மக்களை அச்சுறுத்தும் மத்திய அரசின் நடவடிக்கைகளை வன்மையாக நாட்டு மக்கள் அனைவரும் கண்டிக்க வேண்டும்

மத்தியில் உள்ள பாஜக அரசு லடசத்தீவுகளை ஒரு காலனியைப் போல் நடத்துகிறது

ADVERTISEMENT

அங்கு வாழும் சுமார் 70000 மக்கள் மீது பாஜக அரசு எவ்வளவு வெறுப்பும் காழ்ப்பும் கொண்டிருக்கிறது என்பது வெளிப்படையாகத் தெரிகிறது

அவர்கள் உணவு முறைகளில் அரசு தலையிடுவதற்கு அரசுக்கு எந்தச் சட்டம் அதிகாரம் தருகிறது? இவ்வாறு அவர் கூறியுள்ளார். 


 

Tags : congress PChidambaram
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT