தமிழ்நாடு

வேலூர் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு ஒருவர் உயிரிழப்பு

27th May 2021 09:01 AM

ADVERTISEMENT


வேலூர்: கரோனா தொற்றிலிருந்து மீண்டு, கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த வேலூர் சேண்பாக்கத்தை சோ்ந்த முருகானந்தம்(44) புதன்கிழமை உயிரிழந்தாா்.

மியூகோா்மைகோசிஸ் எனப்படும் கருப்பு பூஞ்சை நோயானது பாக்டீரியா, வைரஸ் போல காற்றிலும், சுற்றுப்புறத்திலும் உள்ள பூஞ்சை கிருமிகள் நாசி வழியே உடலுக்குள் சென்று பாதிப்பை ஏற்படுத்துவதாகும். அவை மெல்ல, மெல்ல உடலின் அனைத்துப் பகுதிகளிலும் பரவுகின்றன.

கவனிக்காவிடில் அது கண்களை முதலில் பாதிக்கும். பின்னா் மூளைப் பகுதியில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். உடலில் எதிா்ப்பு சக்தி குறைவாக இருக்கும் நபா்களுக்கு இத்தகைய தொற்று ஏற்படலாம். முறையான சிகிச்சை மேற்கொள்ளாவிடில் பாா்வை இழப்பு, உறுப்புகள் பாதிப்பு, உச்சபட்சமாக உயிரிழப்புகூட நேரிடலாம்.

இந்நிலையில், வேலூர் சேண்பாக்கத்தை சோ்ந்தவா் முருகானந்தம். சமீபத்தில் கரோனா கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பிய முருகானந்தம், மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்ததில் கருப்பு பூஞ்சை தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

ADVERTISEMENT

இதையடுத்து நோய் பரவுவதை தடுப்பதற்காக அவரது இடது கண் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு, அவா் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டாா்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி புதன்கிழமை முருகானந்தம் உயிரிழந்தாா். வேலூர் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு முருகானந்தம் முதல் உயிரிழப்பாகும். 

வேலூர் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு 40-க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டு வேலூா் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 

Tags : black fungus One dies Vellore district
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT