தமிழ்நாடு

கூட்டுறவு மற்றும் உணவுத்துறைச் செயலாளராக முகமது நசிமுதீன் ஐஏஎஸ் நியமனம்

27th May 2021 04:26 PM

ADVERTISEMENT

தமிழகத்தில் மேலும் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, மாநில தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த முகமது நசிமுதீன், கூட்டுறவு மற்றும் உணவுத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 

ஆசிரியர்கள் தேர்வு வாரியத்தின் தலைவராக இருந்த நிர்மல் ராஜ் ஐஏஎஸ், புவியியல் மற்றும் சுரங்கம் - நிர்வாக இயக்குனராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

அதேபோன்று மக்கள் மறுவாழ்வு மையத்தின் சிறப்புச் செயலராக இருந்த வெங்கடேஷ் ஐஏஎஸ், கருவூல கணக்குகள் - ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

ADVERTISEMENT

மேலும், டாஸ்மாக் நிர்வாக இயக்குநராக எல். சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார். 

நேற்று முன்தினம் 21 ஐஏஎஸ் அதிகாரிகளும் நேற்று 6 ஐஏஎஸ் அதிகாரிகளும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர், பல அதிகாரிகளுக்கு புதிய பொறுப்புகளும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

 

 

Tags : tn govt
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT