தமிழ்நாடு

சுருளி அருவியில் வெள்ளம்: நீர்பிடிப்பு பகுதிகள் தொடர் மழை எதிரொலி

27th May 2021 10:24 AM

ADVERTISEMENT

 

கம்பம்: தேனி மாவட்டம், சுருளி அருவியில் தொடர் மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

தேனி மாவட்டத்தில் மேற்கு மலைத்தொடரில் அமைந்துள்ளது சுருளி அருவி. யாஸ் புயல் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர் மழை பெய்து வருகிறது, இதன் காரணமாக சுருளி மலையில் அமைந்துள்ள சுருளி அருவியின் நீர்பிடிப்பு பகுதிகளான அரிசிப்பாறை, ஈத்தைப்பாறை ஆகிய ஓடைகளில் நீர் வரத்து ஏற்பட்டது. மேலும் சுருளிமலையின் இதர நீர் ஊற்றுகளிலும் அதிக அளவில் நீர் வரத்து ஏற்பட்டது.

இதனால் வியாழக்கிழமை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஏற்கனவே தடை உத்தரவு காரணமாக அருவியில் சுற்றுலா பயணிகள் பக்தர்கள் அனுமதிக்கப்படுவது இல்லை. 

ADVERTISEMENT

இதனால் மேகமலை வன உயிரின  சரணாலயம் ஊழியர்கள் அருவியின்  வெள்ளப்பெருக்கை கண்காணித்து வருகின்றனர்.

Tags : Suruli waterfalls Floods Heavy Rain
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT