தமிழ்நாடு

தமிழகத்தில் ஒரே நாளில் 3.23 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தம்

27th May 2021 09:56 PM

ADVERTISEMENT

தமிழகத்தில் இதுவரை 81.40 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.  

தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் 16-ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கின. முதல்கட்டமாக சுகாதாரப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்கள் என, ஐந்து லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

அதன் தொடா்ச்சியாக முதியவா்களுக்கும், 45 வயதுக்கு மேற்பட்டோருக்கும், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசிகள் செலுத்துவது தொடங்கப்பட்டது. அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் மக்கள் ஆா்வமாக தடுப்பூசி செலுத்திக் கொண்டு வருகின்றனா். அந்த வகையில், இதுவரை 81,40,164 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று ஒரேநாளில் மட்டும் 3,23,915 பேருக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

Tags : corona vaccine
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT