தமிழ்நாடு

சென்னை பாரிமுனையில் தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார் முதல்வர்

27th May 2021 10:53 AM

ADVERTISEMENT

 

சென்னை பாரிமுனை அருகே உள்ள டான் பாஸ்கோ பள்ளியில் கரோனா தடுப்பூசி முகாமை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார். 

தமிழகத்தில் கரோனா பரவலை ஒழிக்க அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து மக்களுக்கு வலியுறுத்தி வருகிறார். 

இதையொட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தடுப்பூசி சிறப்பு முகாம்களையும் தொடங்கி வைத்து வருகிறார். 

ADVERTISEMENT

அந்தவகையில் இன்று சென்னை துறைமுகம் தொகுதிக்கு உள்பட்ட பாரிமுனை அருகே உள்ள டான் பாஸ்கோ பள்ளியில் கரோனா தடுப்பூசி முகாமை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார். இன்று மட்டும் இந்த முகாமில் 500 பேருக்கு கரோனா தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. 

இதையடுத்து அருகில் உள்ள பாரதி மகளிர் கல்லூரியில் 100 படுக்கைகள் கொண்ட சிறப்பு கரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளதையும் முதல்வர் பார்வையிட்டு அங்குள்ள நோயாளிகளிடம் அவர்களது உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். 

இந்த நிகழ்வின்போது துறைமுகம் தொகுதி எம்எல்ஏவான அமைச்சர் சேகர் பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சென்னை ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் இருந்தனர். 

Tags : சென்னை
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT