தமிழ்நாடு

கரோனா: நாகையில் வீடு வீடாகச் சென்று கண்காணிக்க அமைச்சர் நடவடிக்கை

27th May 2021 05:18 PM

ADVERTISEMENT

நாகை மாவட்டத்தில் கரோனா தொற்றை கட்டுப்படுத்த குழுக்கள் அமைத்து வீடு வீடாக சென்று சிகிச்சை அளிக்கவும், கண்காணிக்கவும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தார்.

நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலம் அரசுப் பள்ளி வகுப்பறை கட்டடங்களில் அமைக்கப்பட்டுள்ள கரோனா தொற்று சிகிச்சை மையத்தை தமிழக சுற்றுச்சூழல் மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்  புதன்கிழமை ஆய்வு செய்தார். 

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

நாகை மாவட்டத்தில் செயல்படும் அரசு மருத்துவமனைகளில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், தேவையான இடங்களில் கரோனா சிசிச்சை மையங்கள் தொடங்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

மாவட்டத்தின் முதலாவது சிசிச்சை மையம் ஆயக்காரன்புலம் பள்ளி கட்டடத்தில் இன்று முதல் செயல்படுகிறது. இங்கு எந்த நேரத்திலும் மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பர்.

தொற்றின் அறிகுறிகள், ஆரம்ப நிலையில் உள்ளவர்கள் தங்கி சிகிச்சை பெற்று குணமடையலாம். சத்தான உணவு, உபகரணங்கள்,மருந்துகள் வழங்கப்படும்.

தற்போது இந்த பகுதியில் நோய்த் தொற்று அதிகரித்து வருவதால் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். இன்றைய சூழலில்  தடுப்பூசி மட்டுமே கரோனாவை எதிர்கொள்ளும் பேராயுதமாகவும்,  உயிரை காக்கும் கவசமாகவும் இருப்பதால் அனைவரும் தவறாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வர வேண்டும் என்றார்.

பின்னர் கோடியக்கரை மற்றும் வேதாரண்யம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக சிகிச்சை மையங்களை அமைச்சர் ஆய்வு செய்தார்.

Tags : நாகை வேதாரண்யம் coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT