தமிழ்நாடு

பருப்பு, பாமாயில் ஒப்பந்தத்திற்குத் தடை: தமிழக அரசு மேல்முறையீடு

27th May 2021 12:09 PM

ADVERTISEMENT

பொது விநியோகத் திட்டத்துக்கு பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்துக்கு இடைக்காலத் தடை விதித்ததை எதிர்த்து தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

20 ஆயிரம் மெட்ரிக் டன் துவரம் பருப்பு, 80 லட்சம் லிட்டர் பாமாயில் ஒப்பந்தத்திற்குத் தடை விதித்ததற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ரேஷன் பருப்பு, பாமாயில் கொள்முதல் ஒப்பந்தத்திற்கு விதித்த தடையை நீக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ADVERTISEMENT

வழக்கு விவரம்: எண்ணெய், பருப்பு ஒப்பந்தத்திற்கு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு வெளியிடப்பட்ட அறிவிப்புக்குத் தடை கோரி கரூரைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இதனை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

அப்போது கரோனா காலத்தில்  மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யவே அவசரகால ஒப்பந்தம் விடப்பட்டதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், 20 ஆயிரம் மெட்ரிக் டன் பருப்பு, 80 லட்சம் பாமாயில் கொள்முதல் செய்யும் டெண்டருக்கு இடைக்காலத் தடை விதித்து தமிழக அரசு சார்பில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் இந்த தடை உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

Tags : Tamil nadu government appeals
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT