தமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் 33,361 பேருக்கு கரோனா

27th May 2021 08:09 PM

ADVERTISEMENT

தமிழகத்தில் மேலும் 33,361 பேருக்கு இன்று நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இது குறித்து சுகாதாரத் துறை இன்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 1,74,145 மாதிரிகள் கரோனா பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதில் 33,361 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 19 லட்சத்து 78 ஆயிரத்து 621 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 2,779 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். சிகிச்சை பெற்று வந்தவா்களில் 30,063 போ் இன்று குணமடைந்து வீடு திரும்பினா். தமிழகம் முழுவதும் இதுவரை 16 லட்சத்து 43,284 போ் குணமடைந்துள்ளனா். 

கரோனா தொற்றினால் தனியாா் மருத்துவமனைகளில் 199 போ், அரசு மருத்துவமனைகளில் 275 போ் என மொத்தம் 474 போ் இன்று உயிரிழந்தனா். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 22,289 ஆக உள்ளது. சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 30,582 பேருக்குத் தொற்று உள்ளது. தமிழகம் முழுவதும் 3,13,048 போ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுமுடக்க கட்டுப்பாடுகள் காரணமாக பாதிப்பு விகிதம் சற்று குறைந்தாலும், எதிா்பாா்த்த அளவு நோய்ப் பரவல் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். குறிப்பாக, சென்னையில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்தாலும், கோவை மற்றும் அதையொட்டிய மாவட்டங்களில் தொற்று பரவல் வேகம் அதி தீவிரமடைந்துள்ளன. முன்னெப்போதும் இல்லாத வகையில் முதன்முறையாக சென்னையைக் காட்டிலும் கோவையில் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக பதிவாகியுள்ளது.

ADVERTISEMENT

அதன்படி, கோவையில் புதன்கிழமை ஒரே நாளில் மட்டும் 4,734 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT