தமிழ்நாடு

கரோனா சிகிச்சை மையத்திற்கு ரூ.1.25 லட்சம் மதிப்புள்ள மருந்து, மாத்திரைகள்

27th May 2021 05:07 PM

ADVERTISEMENT

தம்மம்பட்டியில் துவக்கப்பட்டுள்ள  கரோனா சிகிச்சை மையத்திற்கு ரூ.1 .25 லட்ச ரூபாய்க்கு மருந்து, மாத்திரை அன்பளிப்பாக வழங்கப்பட்டது.    

தம்மம்பட்டியில்  மேம்படுத்தப்பட்ட  அரசு  ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்போது துவக்கப்பட்டுள்ள   30 படுக்கை வசதிகளுடன் கூடிய கரோனா சிகிச்சை மையத்திற்கு தம்மம்பட்டி வட்டார மருந்து வணிகர் சங்கத்தினர் எம்.பி. 40, ஐவர் மெக்டின் உள்ளிட்ட ரூ.1.25 லட்ச ரூபாய்க்கு உயிர் காக்கும்  மருந்துகளை சங்க நிர்வாகி திருச்செல்வன் தலைமையில், வட்டார தலைமை மருத்துவர் வேலுமணியிடம் அன்பளிப்பாக வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் ஜமால், சங்க நிர்வாகிகள் ராஜா சர்தார், பிரசாந்தகுமார், ராஜேந்திரன், சரவணன், சையது முஸ்தபா, மோகன் பாபு மற்றும்  அரசு செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் பங்கேற்றனர்.

Tags : தம்மம்பட்டி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT