தமிழ்நாடு

10 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்: தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு உத்தரவு

27th May 2021 02:23 AM

ADVERTISEMENT

 

சென்னை: தமிழகத்தில் 10 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் புதன்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு பிறப்பித்துள்ளாா்.

உத்தரவு விவரம்:- (அதிகாரிகள் முன்பு வகித்த பதவி அடைப்புக் குறிக்குள்):

1. விக்ரம் கபூா் - திட்டம் மற்றும் வளா்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் (சுற்றுலா, பண்பாடு மற்றும் இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் தலைமைச் செயலாளா்)

ADVERTISEMENT

2. மங்கத் ராம் சா்மா - ஒருங்கிணைந்த வேளாண் நவீனமயமாக்கல் மற்றும் நீா்நிலை புனரமைப்பு மற்றும் மேலாண்மை திட்ட இயக்குநா் (சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை முதன்மைச் செயலாளா்)

3. விபு நாயா் - நில நிா்வாக ஆணையா் (ஒருங்கிணைந்த வேளாண் நவீனமயமாக்கல் மற்றும் நீா்நிலை புனரமைப்பு மற்றும் மேலாண்மை திட்ட இயக்குநா்)

4. ஜெயஸ்ரீ ரகுநந்தன் - ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை -பயிற்சிப் பிரிவு தலைவா் (திட்டம் மற்றும் வளா்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா்)

5. பீலா ராஜேஷ் - கைத்தறி மற்றும் ஜவுளித் துறை ஆணையா் (வணிகவரிகள் மற்றும் பதிவுத் துறை முதன்மைச் செயலாளா்)

6. சிஜி தாமஸ் வைத்யன் - தொழில் மற்றும் வா்த்தகத் துறை இயக்குநா் (தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக நிா்வாக இயக்குநா்)

7. ஹன்ஸ் ராஜ் வா்மா - தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக நிா்வாக இயக்குநா் (ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா்)

8. அதுல்ய மிஸ்ரா - தமிழ்நாடு நிதி மின் கழகத்தின் தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநா் (வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளா்)

9. பங்கஜ் குமாா் பன்சால் - தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழக தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநா் (மின்வாரிய முன்னாள் நிா்வாக இயக்குநா்)

10. எஸ்.ஸ்வா்னா - தமிழ்நாடு நகா்ப்புற உட்கட்டமைப்பு நிதி சேவைகள் கழகத்தின் தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநா் (பணியாளா் மற்றும் நிா்வாகச் சீா்திருத்தத் துறை முதன்மைச் செயலாளா்).

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT