தமிழ்நாடு

நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர் மழை: ஒரே நாளில் பாபநாசம் அணை நீர்மட்டம் 10 அடி உயர்வு

27th May 2021 12:26 PM

ADVERTISEMENT

 

அம்பாசமுத்திரம்:  மேற்குத் தொடர்ச்சி மலை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து இரண்டாவது நாளாக மழை பெய்து வருவதையடுத்து அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து அணைகள் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

வங்கக்கடலில் உருவான யாஸ் புயலால் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து இரண்டாவது நாளாக மழை பெய்து வருவதையடுத்து அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. 

பாபநாசம் அணையின் நீர்மட்டம் 119.60 அடியாக இருந்த நிலையில், வியாழக்கிழமை காலை 9.75 அடி உயர்ந்து 129.35 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து 9563.88 கன அடியாகவும், வெளியேற்றம் 467.25 கன அடியாகவும் இருந்தது. 135.30 அடியாக இருந்த சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 16.11 அடி உயர்ந்து 151.41 அடியாக இருந்தது. 84.10 அடியாக இருந்த மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 3.90 அடி உயர்ந்து 88 அடியாகவும் அணைக்கு நீர்வரத்து 3595 கன அடியாக இருந்தது. வடக்குப் பச்சையாறு அணையில் நீர்மட்டம் 42.49 அடியாகவும் நீர்வரத்து மற்றும் வெளியேற்றம் 5 கன அடியாகவும் இருந்தது. நம்பியாறு அணையில் நீர்மட்டம் 12.57 அடியாக இருந்தது. கொடுமுடியாறு அணையில் நீர்மட்டம் 27.25 அடியாகவும் நீர்வரத்து 90 கன அடியாகவும் இருந்தது.
65.40 அடியாக இருந்த கடனாநதி அணையின் நீர்மட்டம் 6.60 அடி உயர்ந்து 72 அடியாகவும் நீர்வரத்து 637 கன அடியாகவும் வெளியேற்றம் 10 கன அடியாகவும் இருந்தது. 49.50 அடியாக இருந்த ராமநதி அணையின் நீர்மட்டம் 10.50 அடி  உயர்ந்து 60 அடியாகவும் நீர்வரத்து 245 கன அடியாகவும் வெளியேற்றம் 10 கன அடியாகவும் இருந்தது. 52.50 அடியாக இருந்த கருப்பாநதி அணையில் நீர்மட்டம் 56.43 அடியாகவும், நீர் வரத்து 146 கன அடியாகவும் வெளியேற்றம் 5 கன அடியாகவும் இருந்தது. 33.25 அடியாக இருந்த குண்டாறு அணை முழுக்கொள்ளளவான 36.10 அடியை எட்டியது. நீர்வர்த்து மற்றும் வெளியேற்றம் 110 கன அடியாக இருந்தது. 54 அடியாக இருந்த அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 26 அடி உயர்ந்து 80 அடியாகவும் நீர்வரத்து 401 கன அடியாகவும் இருந்தது.

ADVERTISEMENT

வியாழக்கிழமை காலை 7 மணி வரை 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்) :

திருநெல்வேலி மாவட்டம்: பாபநாசம் அணை 41, சேர்வலாறு அணை 28, மணிமுத்தாறு அணை 20.04, நம்பியாறு அணை 23, கொடுமுடியாறு அணை 25, அம்பாசமுத்திரம் 27, சேரன்மகாதேவி 14.4, ராதாபுரம் 11, நாங்குநேரி 23, களக்காடு 10.6, மூலக்கரைப்பட்டி 12, பாளையங்கோட்டை 6, திருநெல்வேலி 6.4.
தென்காசி மாவட்டம்: கடனாநதி அணை 27, ராமநதி அணை 10, கருப்பா நதி அணை 17, குண்டாறு அணை 29, அடவிநயினார் அணை 72, ஆய்குடி 24, செங்கோட்டை 14, தென்காசி 36.6, சங்கரன்கோவில் 17, சிவகிரி 15 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. 

Tags : Papanasam Dam Continuous rain
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT