தமிழ்நாடு

கிணற்றில் விழுந்த மானை உயிருடன் மீட்ட இளைஞர்கள்

21st May 2021 01:51 PM

ADVERTISEMENT

 

அவிநாசி: அவிநாசி அருகே காசிகவுண்டன்புதூரில் கிணற்றுக்குள் தவறி விழுந்த மானை, இளைஞர்கள் வியாழக்கிழமை உயிருடன் மீட்டனர்.

அவிநாசி அருகே காசிகவுண்டன்புதூரில் தனியாருக்கு சொந்தமான 120 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் நாய்களால் துரத்தி வரப்பட்ட 3 மாத பெண் புள்ளி மான் வியாழக்கிழமை மாலை விழுந்தது. 

இதையறிந்து, பாம்பு பிடிப்பதில் பழக்கப்பட்ட அவிநாசி பகுதியைச் சேர்ந்த இளைஞர் விஜய் மற்றும் இவர்களது நண்பர்கள் கிணற்றுக்குள் இறங்கி நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த மானை நீண்ட நேரம் போராடி உயிருடன் மீட்டனர். 

ADVERTISEMENT

மேலும் உயிருடன் மீட்கப்பட்ட புள்ளி மான் வனத்துறையினர் மூலம் அவிநாசி வனப்பகுதியில் விடப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT