தமிழ்நாடு

'பசித்தால் எடுத்துக்கொள்ளுங்கள்'

21st May 2021 03:26 PM

ADVERTISEMENT


பேராவூரணி மனோரா அரிமா சங்கத்தினர் தினசரி மதியம் 100 பேருக்கான உணவுப்பொட்டலங்களை தயார் செய்து பேராவூரணி கடைவீதியில் 'பசித்தால் எடுத்துக்கொள்ளுங்கள்' என விளம்பர பதாகை வைத்து உணவுப்பொட்டலங்களை வைத்துள்ளனர்.

பேராவூரணி, கரோனா பொதுமுடக்கத்தால் பல்வேறு தரப்பினரின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகியுள்ள நிலையில், ஆதரவற்றோர், அனாதைகள் நிலை மிகவும் மோசமாக உள்ளது. யாரிடமும் சென்று உதவி கேட்கமுடியாத நிலையில் சில நல்ல உள்ளங்கள் ஆங்காங்கே உணவுப்பொட்டலங்கள் வழங்குவதால் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். 

இவர்களின் நிலைகுறித்து கவலையுற்ற பேராவூரணி மனோரா அரிமா சங்கத் தினர் தினசரி மதியம் 100 பேருக்கான உணவுப்பொட்டலங்களை தயார் செய்து பேராவூரணி கடைவீதியில் 'பசித்தால் எடுத்துக்கொள்ளுங்கள்' என விளம்பர பதாகை வைத்து உணவுப்பொட்டலங்களை வைத்துள்ளனர்.

பசிக்காத சிலர் எடுத்துச் சென்றாலும் கூட வேறு வழியே இல்லாத பசித்த வயிறுகளும்  நிரம்புகின்றன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT