தமிழ்நாடு

பெரியகுளம் அருகே ஆதிவாசி மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் 

21st May 2021 04:10 PM

ADVERTISEMENT

 

பெரியகுளம் அருகே அஞ்சுகம் அம்மையார் காலனி ஆதிவாசி மக்களுக்கு ஸ்ரீ குருதட்சிணாமூர்த்தி சேவா சங்கத்தின் சார்பில் இன்று நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டது.

பெரியகுளம் , கல்லாறு அருகே அஞ்சுகம் அம்மையார் காலனி உள்ளது. இங்கு 100 க்கு மேற்பட்ட ஆதிவாசி மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தற்போது வேலை இல்லாததால் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்தனர்.

இதனையறிந்த ஸ்ரீ குருதட்சிணை மூர்த்தி சேவா சங்கத்தின் சார்பில் ஓரு மாதத்திற்கு தேவையான அரிசி, பருப்பு, காய்கறிகள் மற்றும் முகக்கவசம், சானிடைசர் கொண்ட தொகுப்பு பைகள் தயார் செய்து, ஸ்ரீ குருதட்சிணா மூர்த்தி சேவா சங்க அறக்கட்டளை கௌரவ ஆலோசகர் சி.சரவணன் இன்று வழங்கினார்.

ADVERTISEMENT

இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ குருதட்சிணா மூர்த்தி சேவா சங்க அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் நக்சல் தடுப்பு படை பிரிவு காவலர்கள் கலந்துகொண்டனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT