தமிழ்நாடு

அக்ராவரம் கிராமத்தில் ராஜீவ் காந்தியின் 30-வது ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

21st May 2021 12:33 PM

ADVERTISEMENT


ராணிப்பேட்டை அடுத்த அக்ராவரம் கிராமத்தில் மாநில காங்கிரஸ் சார்பில் முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தி 30 -ஆவது ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.

ராணிப்பேட்டை அடுத்த அக்ராவரம் கிராமத்தில் மாநில காங்கிரஸ் சார்பில் முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தி 30 -ஆவது ஆண்டு நினைவு அஞ்சலி வெள்ளிக்கிழமை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாநில செயலாளரும், மாநில பொதுக்குழு உறுப்பினருமான அக்ராவரம் கே. பாஸ்கர் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் சி.பஞ்சாட்சரம், மாநில பொதுக்குழு உறுப்பினர் வினாயகம்  ஆகியோர் கலந்து கொண்டு ராஜீவ்காந்தியின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

இதனைதொடர்ந்து பொதுமக்களுக்கு முககவசம், கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. 

நிகழ்ச்சியில் லாலாப்பேட்டை ராமமூர்த்தி, ரங்கநாதன், திருநாவுக்கரசு பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT