தமிழ்நாடு

கோவில்பட்டியில் ராஜீவ் காந்தி நினைவு தினம் அனுஷ்டிப்பு

21st May 2021 12:03 PM

ADVERTISEMENT

 

கோவில்பட்டி: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் நினைவு தினம் வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.

கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் காமராஜ் தலைமை வகித்து ராஜீவ் காந்தியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நகர தலைவர் சண்முகராஜ் முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் திருப்பதி ராஜா பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழியை வாசித்தார்.

நிகழ்ச்சி வடக்கு மாவட்ட மகளிரணி தலைவி திவ்யா, மாநில இணைச் செயலர் மரிய வினோவா, நகர துணைத் தலைவர் பங்காரு சாமி, நகரச் செயலர் ராமச்சந்திரன், கிழக்கு வட்டார பொறுப்பாளர் அருண்பாண்டியன், நகர குழு உறுப்பினர் கோபால், அமைப்புசாரா வடக்கு மாவட்ட தலைவர் ஜோஸ்வா, ஐஎன்டியூசி தொழிற்சங்க வடக்கு மாவட்ட செயலாளர் சிவப்பிரகாசம், இலக்குமி ஆலை ஐஎன்டியூசி தொழிற்சங்கத்தை சேர்ந்த பழனிச்சாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT