தமிழ்நாடு

திருப்பூரில் ராஜீவ் காந்தி நினைவு தினம் அனுசரிப்பு

21st May 2021 03:31 PM

ADVERTISEMENT


திருப்பூர்: திருப்பூரில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 30 ஆம் ஆண்டு நினைவு தினம் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஆர்.கிருஷ்ணன் தலைமையில் நல்லூர் நகராட்சி பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 300 நபர்களுக்கு ரூ.400 மதிப்புள்ள அரிசி சிப்பம் மற்றும் பருப்பு வகைகள் வழங்கப்பட்டது. மேலும், 1,000 நபர்களுக்கு முககவசம், கபசுரகுடிநீரும் வழங்கப்பட்டது. 

அதேபோல, ராமையா காலனியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராஜீவ்காந்தியின் உருவப்படத்துக்கு காங்கிரஸ் நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இதில், பிசிசி உறுப்பினர்கள் கோபால்சாமி, வி.ஆர்.ஈஸ்வரன், முருகேசன், ஈஸ்வரமூர்த்தி, சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT