தமிழ்நாடு

புதுவை சட்டப்பேரவைக்கு தற்காலிக பேரவைத் தலைவர் நியமனம்

21st May 2021 09:25 PM

ADVERTISEMENT

புதுச்சேரி சட்டப்பேரவையின் தற்காலிக பேரவைத் தலைவராக லட்சுமி நாராயணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

புதுவை சட்டப்பேரவை தேர்தல் முடிந்து, தேசிய ஜனநாயகக் கூட்டணி 16 இடங்களில் வெற்றி பெற்று, ஆட்சி அமைத்துள்ளது. இக்கூட்டணி தலைவரான என் ஆர் காங்கிரஸ் தலைவர் என் ரங்கசாமி முதல்வராக பதவி ஏற்றுள்ளார். இதனிடையே அவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால் மே.9ஆம் தேதி சிகிச்சைக்கு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அண்மையில் குணமடைந்து வீடு திரும்பியவர் ஓய்வில் உள்ளார். இதனிடையே புதுவை சட்டப்பேரவைக்கான தற்காலிக சபாநாயகரை, முதல்வர் ரங்கசாமி பரிந்துரைத்து நியமித்துள்ளார்.

இதுகுறித்து புதுச்சேரி சட்டப்பேரவை செயலகம் வெள்ளிக்கிழமை இரவு வெளியிட்ட தகவல்: புதுவை மாநில 15-ஆவது சட்டப்பேரவையின் தற்காலிக பேரவைத் தலைவராக முதல்வர் பரிந்துரையின் பேரில், ராஜ்பவன் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் க. லட்சுமி நாராயணனை, துணைநிலை ஆளுநர் நியமித்துள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT

Tags : Pudhucerry
ADVERTISEMENT
ADVERTISEMENT