தமிழ்நாடு

திருச்சியில் ராஜீவ் காந்தி சிலைக்கு முதல்வர் மரியாதை

21st May 2021 03:57 PM

ADVERTISEMENT

திருச்சியில் வெள்ளிக்கிழமை ஆய்வுப் பணிகளுக்கு வந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், திருச்சி ஜங்ஷன் பகுதியில் உள்ள ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

கரோனா தடுப்பு பணிகளின் முன்னேற்ற நிலை குறித்து ஆய்வு செய்ய, மதுரையில் இருந்து சாலை மார்க்கமாக திருச்சிக்கு வெள்ளிக்கிழமை பிற்பகல் வருகை தந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

திருச்சி ஜங்ஷன் பகுதியில் உள்ள ராஜீவ்காந்தி சிலைக்கு வருகை தந்த அவர், ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். ராஜீவ் காந்தியின் சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்.

ADVERTISEMENT

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கே.என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருநாவுக்கரசு எம்.பி. மற்றும் காங்கிரஸ், திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து திருச்சி சுற்றுலா மாளிகைக்குச் சென்று ஓய்வெடுத்தார். மாலையில் கரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்கிறார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT