தமிழ்நாடு

கருப்புப் பூஞ்சை நோய்க்கான மருந்து: தெலங்கானாவிலிருந்து புதுச்சேரிக்கு வரவழைத்த துணைநிலை ஆளுநர்

21st May 2021 08:32 PM

ADVERTISEMENT

கருப்புப் பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படும் மருந்துகளை தெலங்கானாவிலிருந்து புதுச்சேரிக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வரவழைத்தார்.  

புதுச்சேரி மாநிலத்தில் கருப்புப் பூஞ்சை நோய் பாதிக்கப்பட்டு ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிக்கு அவசர சிகிச்சை அளிக்க மருந்துகள் வேண்டுமென்று புதுச்சேரி துணைநிலை ஆளுநருக்கு காரைக்கால் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்விடுத்திருக்கிறார்.

இதையடுத்து கருப்புப் பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படும் 10 ஆம்பொனைக்ஸ் மருந்துகளை தெலங்கானாவிலிருந்து புதுச்சேரிக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வரவழைத்தார். பின்னர் அவை புதுச்சேரி ஜிப்மர் மருத்துமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இதனிடையே மருத்துவ உதவிகள் அளித்த தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மற்றும் தெலங்கானா ராஜ்பவன் அதிகாரிகளுக்கு தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் நன்றி தெரிவித்துள்ளார். 
 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT