தமிழ்நாடு

கரோனா பரவல் : பெரியகுளம் நகராட்சி மூடல்

21st May 2021 03:19 PM

ADVERTISEMENT


தேனி மாவட்டம், பெரியகுளம் நகராட்சி பணியாளர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதையடுத்து வெள்ளிக்கிழமை முதல் நகராட்சி மூடப்பட்டுள்ளது.

பெரியகுளம் நகராட்சியில் 100 க்கு மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

பரிசோதனையில் 5 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு, மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் நகராட்சி அலுவலகம் வெள்ளிக்கிழமை முதல் மூடப்படுகிறது.

பெரியகுளம் நகராட்சி ஆணையாளர் அசோக்குமார் தெரிவித்ததது :
நகராட்சி பணியாளர்கள் 5 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து காலவரையற்று பெரியகுளம் நகராட்சி அலுவலகம் மூடப்படுகிறது. திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

ADVERTISEMENT

பொதுமக்கள் யாரும் அலுவலகத்திற்கு வரவேண்டாம். பொதுமக்கள் தங்களது புகாரை நகராட்சி தபால் பெட்டி அல்லது அஞ்சலகம் மூலம் அனுப்பி தீர்வு காணலாம் என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT