தமிழ்நாடு

கரோனா நிவாரணத்துக்கு ரூ. 2 லட்சம் வழங்கிய அமைச்சர் சு.முத்துசாமி

20th May 2021 04:07 PM

ADVERTISEMENT

கரோனா நிவாரண நிதியாக தமிழக வீட்டுவசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமி ரூ. 2 லட்சத்துக்கான காசோலையை முதல்வரிடம் வழங்கினார். 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சேலத்தில் கரோனா தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வை முடித்துக்கொண்டு திருப்பூர் செல்லும் வழியில் ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் சுங்கச்சாவடியில் தமிழக வீட்டுவசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமி முதல்வரை வரவேற்றார். 

அப்போது முதலமைச்சர் கரோனா பொது நிவாரண நிதிக்கு முதல் தவணையாக 2 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதல்வரிடம் வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் சி.கதிரவன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரைதுரை உட்பட அதிகாரிகள் பலர் இருந்தனர். 

ADVERTISEMENT

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT