தமிழ்நாடு

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி

19th May 2021 08:18 AM

ADVERTISEMENT


தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் திடீர் மூச்சுத்திணறல் காரணமாக, அதிகாலை 3:30 மணியளவில் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு, பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தொடா்ந்து அவரது உடல்நிலையை மருத்துவா்கள் கண்காணித்து வருகின்றனா்.

கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவு காரணமாக விஜயகாந்த், பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்து வந்ததும், உடல்நிலையை கருத்தில் கொண்டே கடந்த பேரவைத் தேர்தலில் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT