தமிழ்நாடு

சேலம், ஈரோடு, கோவை மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் நாளை நேரில் ஆய்வு

19th May 2021 09:49 AM

ADVERTISEMENT


சென்னை: சேலம், ஈரோடு, கோவை மாவட்டங்களுக்கு நாளை நேரில் சென்று ஆய்வு மேற்கொள்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.  

தமிழகத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 16,64,350 ஆக அதிகரித்துள்ள. நேற்று ஓரே நாளில் 364 பேர் உயிரிழந்த நிலையில் தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18,329 -ஆக அதிகரித்துள்ளது. 

தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் வரும் 24 ஆம் தேதி வரை அமலில் உள்ள கட்டுப்பாடுகளை தமிழக அரசு தீவிரமாக்கியுள்ளது. 

இந்நிலையில்,  சேலம், ஈரோடு, கோவை மாவட்டங்களில் நாளை வியாழக்கிழமை நேரில் சென்று ஆய்வு மேற்கொள்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.  

ADVERTISEMENT

கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT