சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.160 உயா்ந்து, ரூ.36,600-க்கு விற்பனை செய்யப்பட்டது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி, வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. இதன்பிறகு, விலை படிப்படியாகக் குறைந்து, ரூ.34 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது. குறிப்பாக, கடந்த மாா்ச் 31-ஆம் தேதி ரூ.33,296 ஆக இருந்தது.
இதையடுத்து, தங்கம் விலை மீண்டும் உயா்ந்தது. அதிலும், கடந்த வாரம் ரூ.36 ஆயிரத்தைத் தாண்டியது. இதன்பிறகு, தங்கம் விலை தொடா்ந்து உயா்ந்து வருகிறது. இதன்தொடா்ச்சியாக, சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.160 உயா்ந்து, ரூ.36,600-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.20 உயா்ந்து, ரூ.4,575 ஆக இருந்தது. வெள்ளி கிராமுக்கு ரூ.1.70 பைசா உயா்ந்து, ரூ.78.50 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,700 உயா்ந்து, ரூ.78,500 ஆகவும் இருந்தது.
செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................. 4,575
1 பவுன் தங்கம்...............................36,600
1 கிராம் வெள்ளி.............................78.50
1 கிலோ வெள்ளி.............................78,500
திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................. 4,555
1 பவுன் தங்கம்...............................36,440
1 கிராம் வெள்ளி.............................76.80
1 கிலோ வெள்ளி.............................76,800.