தமிழ்நாடு

'ஷைலஜாவுக்கு இடமில்லை' - பினராயி விஜயனுக்கு நடிகை மாளவிகா மோகனன் கேள்வி

18th May 2021 03:19 PM

ADVERTISEMENT

கேரள புதிய அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜாவுக்கு இடமளிக்கப்படாதது குறித்து பினராயி விஜயனுக்கு நடிகை மாளவிகா மோகனன் கேள்வி எழுப்பியுள்ளார். 

முதல்வராக இரண்டாவது முறையாக பினராயி விஜயன் பதவியேற்க உள்ள நிலையில் அவரது அமைச்சரவையில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜாவுக்கு இடமில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூறியுள்ளது. 

பினராயி விஜயன் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெறவுள்ள 21 அமைச்சர்களும் புதியவர்கள் என்றும் அக்கட்சி இன்று தகவல் வெளியிட்டுள்ளது. 

இந்நிலையில் கேரளத்தில் நிபா வைரஸ் மற்றும் தற்போது கரோனா வைரஸ் தொற்று பேரிடர் காலத்தில் சிறப்பாக செயல்பட்ட முந்தைய அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா அமைச்சரவையில் இடம்பெறாதது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது. 

ADVERTISEMENT

அந்தவகையில் விஜயின் 'மாஸ்டர்' படத்தில் நடித்த நடிகை மாளவிகா மோகனன்' நமக்கு கிடைத்த சிறந்த சுகாதார அமைச்சர்களில் ஒருவரான ஷைலஜா டீச்சர், கரோனா பேரிடரின்போதே அமைச்சரவையில் இடம்பெறவில்லையா? உண்மையில் அங்கு என்ன நடந்தது?' என பினராயி விஜயனை டேக் செய்து கேள்வி எழுப்பியுள்ளார். 

Tags : kerala
ADVERTISEMENT
ADVERTISEMENT