தமிழ்நாடு

கம்பம்: 'உங்கள் தொகுதியில் முதல்வர்' திட்டத்தின் கீழ் மனுக்கள் விசாரணை

18th May 2021 02:34 PM

ADVERTISEMENT

கம்பம்: தேனி மாவட்டம் கம்பத்தில் உங்கள்  தொகுதியில் முதல்வர் என்ற திட்டத்தின் மனுக்கள் மீது உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் நேரடியாக வீடுகளுக்குச் சென்று செவ்வாய் கிழமை விசாரணை செய்தனர்.

உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் நா.சக்திவேல் கம்பம் நகர் பகுதியில் உள்ள உழவர்சந்தை, வர்த்தக நிறுவனங்கள், உணவகங்கள் போன்றவற்றை ஆய்வு செய்தார்.

கரோனா பரவலைத் தடுக்க விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்று ஆய்வு செய்தார்.

க.புதுப்பட்டி பேரூராட்சி பகுதியில் தொற்று நோய் பரவல் ஏற்பட்ட ஒரு குடும்பத்தினரின்  வீட்டுக்குச் சென்று அவர்களின் தேவைகளை கேட்டறிந்து,  தனிமைப்படுத்திக்கொண்டார்களா என்று ஆய்வு செய்தார்.

ADVERTISEMENT

உங்கள் தொகுதியில் முதல்வர் என்ற திட்டத்தின் கீழ்  முதியோர் உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்த காமயகவுண்டன்பட்டி பேரூராட்சி பகுதியை சேர்ந்த  மனுதாரரின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று விசாரணை செய்து தகுதியானவர்களுக்கு உடனே முதியோர் உதவித்தொகை வழங்க  பரிந்துரை செய்தார்.

உத்தமபாளையம் வட்டாட்சியர் உதய ராணி, வருவாய் ஆய்வாளர் ஹரி.செந்தில்குமார் மற்றும் வருவாய்த்துறையினர் கலந்து கொண்டுடனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT