தமிழ்நாடு

கூத்தாநல்லூர் பேருந்து நிலையம் புதுப்பிக்கும் பணிகளைத் தொடங்க எம்எல்ஏ அறிவுரை

DIN

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் நகராட்சியில், கரோனா பேரிடர் நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

கரோனா தொற்று பொது முடக்கத்தை முன்னிட்டு விழா எளிமையாக நடத்தப்பட்டது. நகராட்சி வளாகத்தில் நடத்தப்பட்ட நிகழ்விற்கு, திருவாரூர் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினரும், திமுக மாவட்டச் செயலாளருமான பூண்டி கே.கலைவாணன் தலைமை வகித்தார். ஆணையர் ஆர்.லதா முன்னிலை வகித்தார். 

நகரச் செயலாளர் எஸ்.எம்.காதர் உசேன் வரவேற்றார். விழாவில், சட்டப்பேரவை உறுப்பினர் நிதியிலிருந்து, 52 தூய்மைப் பணியாளர்கள், 23 டெங்கு தடுப்பு பணியாளர்கள்,10 அம்மா உணவக ஊழியர்கள், 5 தூய்மை இந்தியா திட்டப் பரப்புரையாளர்கள் உள்ளிட்ட 90 பேருக்கு, கரோனா பேரிடர் நிவாரணப் பொருட்களை, சட்டப் பேரவை உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன் வழங்கினார். தொடர்ந்து, கூத்தாநல்லூர் நகராட்சியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தாமல் பாழாகிப்போன புதிய பேருந்து நிலையம் குறித்து, நகராட்சி ஆணையர் லதாவிடம் விசாரித்தார். 

அதைத் தொடர்ந்து,கூத்தாநல்லூர் புதிய பேருந்து நிலையத்தை பழுது நீக்கி, உடனே புதுப்பிக்க வேண்டும். அதற்கானப் பணிகளை உடனே தொடங்கச் சொன்னார். மேலும், 12 கடைகளுடன் கூடிய உழவர் சந்தையைக் கட்டுவதற்கான இடத்தை தேர்வு செய்து, பணிகளையும் தொடங்கச் சொன்னார். சனிக்கிழமைதோறும் வாரச்சந்தை நடைபெறுவதை நிறுத்த வேண்டாம் எனவும் உத்தரவிட்டார். 

நிகழ்வில், நகராட்சி பொறியாளர் ராஜகோபால், கூத்தாநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் வி.எஸ்.வெங்கடேசன், நகர திமுக அவைத் தலைவர் எஸ்.வி. பக்கிரிசாமி,சுகாதார ஆய்வாளர் கி.அருண்குமார், திமுக வர்த்தக அணி நிர்வாகி குரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களிக்க பூத் ஸ்லிப் கட்டாயமா? 13 அடையாள ஆவணங்கள் எவை?

திருக்கடையூரில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

மன்னாா்குடியில் தீத்தொண்டு நாள் வாரம்

தொகுதி வாக்காளா் அல்லாதோா் தொகுதியை விட்டு வெளியேற உத்தரவு

வாக்குப் பதிவு மையங்களில் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்

SCROLL FOR NEXT