தமிழ்நாடு

நோய் தொற்றின் தாக்கம் குறைந்து வருவது மன நிறைவை தருகிறது: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

DIN

நோய் தொற்றின் தாக்கம் குறைந்து வருவது மன நிறைவை தருகிறது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 
 
ஆயிரம் விளக்கு சட்டப்பேரவைத் தொகுதி சார்பாக சென்னை லயோலா கல்லூரியில் கரோனா நோய் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க 100 படுக்கை கொண்ட கரோனா நோய் பரவல் தடுப்பு மையத்தினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று துவக்கி வைத்தார். அதைத்தொடர்ந்து பேசிய அவர், முதல்வர் உத்தரவின்படி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி இணைந்து கரோனா நோய் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க கூடுதலாக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதிகள் ஏற்படுபடுத்தப்பட்டு வருகின்றன.

அதனடிப்படையில் நேற்று சென்னை ஈஞ்சம்பாக்கம் அரசு மருத்துவமனையில் 33 ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் 100 படுக்கை வசதிகொண்ட கரோனா சிகிச்சை மையமும், சென்னை விருகம்பாக்கத்தில் மீனாட்சி பொறியியல் கல்லூரியில் 40 ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் 100 படுக்கை வசதிகொண்ட கரோனா சிகிச்சை மையமும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று சென்னை லயோலா கல்லூரி வளாகத்தில் 100 படுக்கை வசதிகள் கொண்ட நோய் பரவல் தடுப்பு மையம் இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது. 

இந்த கட்டுப்பாட்டு மையத்திற்கென பிரத்யேக தொலைபேசி எண் 9025452222 அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை மாநகராட்சி அரசு பொது மருத்துவமனைகளில் 995 ஆக்சிஜன் செறிவூட்டிகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 595 ஆக்சிஜன் செறிவூட்டிகள் சென்னை மாநகராட்சியின் முயற்சியினால் இன்று வரவுள்ளது. இதனை ஆக்சிஜன அதிகளவில் தேவைப்படும் மருத்துவமனைகளுக்கு பிரித்து அனுப்பும் பணி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

மேலும் சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் 11,800 களப் பணியாளர்கள் மூலம் வீடு வீடாகச் சென்று நோய் பாதித்தவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்கவும், விழிப்புணர்வை ஏற்படுத்தியும் வருகின்றனர். இதனால் நோய் தொற்றின் தாக்கம் குறைந்து வருவது மன நிறைவை தருகிறது என்றார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை வெய்யிலைக் கொண்டாடும் எதிர்நீச்சல் ஈஸ்வரி!

ம.பி.யில் 29 தொகுதிகளிலும் பாஜக வெற்றிபெறும்: முதல்வர் யாதவ்

கேரள பெண் உள்பட 17 இந்திய மாலுமிகள் நாடு திரும்பினர்

ஆர்டிகள் 370: ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடத் தயார்: ரோஹித் சர்மா

SCROLL FOR NEXT