தமிழ்நாடு

அருப்புக்கோட்டை தனியார் பொறியியல் கல்லூரியில் கரோனா சிகிச்சை மையம் அமைக்க ஏற்பாடு: அமைச்சர்

DIN

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் கரோனா சிகிச்சைக்கான படுக்கை வசதிக்கு ஏற்கெனவே நடைமுறையில் உள்ள இருகல்லூரிகள் தவிரக் கூடுதலாக 3 ஆவதாக ஒரு தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் இடம் ஒதுக்க ஏற்பாடு செய்துள்ளதாக திங்கள்கிழமை வருவாய்த்துறை அமைச்சர் இராமச்சந்திரன் தெரிவித்தார்.

அருப்புக்கோட்டை நகராட்சி அலுவலக வளாகத்தில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் களப் பணிகள் குறித்து துறை அதிகாரிகளுடனான சிறப்பு ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் இராமச்சந்திரன் தலைமை வகித்தார். சுகாதாரத்துறை ஆய்வாளர் சரவணன்,காவல்துணை கண்காணிப்பாளர் சகாய ஜோஸ்,மருத்துவத்துறை அலுவலர்,மற்றும் வருவாய் வட்டாட்சியர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அப்போது இந்த 4 அரசுத்துறையினரும் நடைமுறையில் நேர்கொள்ளும் பிரச்னைகள், சவால்கள் குறித்து அதிகாரிகள் எடுத்துரைத்திட, அதற்கான தீர்வுகள் குறித்து அமைச்சர் ஆலோசனைகள் வழங்கினார். கூடுதலாக பல்ஸ் ஆக்ஸி மீட்டர்கள், முகக்கவசங்கள் வேண்டுமென மருத்துவத்துறையினரும்,கூடுதல் கிருமி நாசிணித்தூள் வேண்டுமென ஊராட்சித்துறை செயலர்களும் கோரிக்கை விடுத்தனர். 

அப்போது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டமான 100 நாட்கள் திட்டத்தில் சமூக இடைவெளி,முகக்கவசம்,கைகளில் கிருமிநாசினி இடுதல்,அடிக்கடி சோப்பால் கைகளைக் கழுவுதல் ஆகிய தொற்றுத் தடுப்பு நடைமுறைகள் சரியாகப் பின்பற்றப்படவேண்டும் இல்லையேல் அவ்வேலை வழங்கப்படாது என வேலை பெறுவோருக்கு (தொழிலாளர்களுக்கு) வலியுறுத்த அமைச்சர் இராமச்சந்திரன் எடுத்துக்கூறினார்.

மேலும் ஏற்கெனவே அருப்புக்கோட்டையில் நடைமுறையில் உள்ள சிகிச்சை மையங்களான தனியார் கலைக் கல்லூரி,தனியார் பாலிடெக்னிக் கல்லூரி ஆகியவை தவிர கூடுதலாக நகரிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் விடுதியையும் கொரோனா சிகிச்சை மையமாக்கப்படும் எனவும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் தெரிவித்ததுடன், காவல்துறையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வீணாகச் சுற்றித்திரியும் மக்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடவேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

உடன் இந்நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை,மருத்துவத்துறை, காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் உள்ளிட்ட சுமார் 50க்கு மேற்பட்டோர் நேரில் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

SCROLL FOR NEXT