தமிழ்நாடு

கரோனா பெருந்தொற்றை முறியடிப்போம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

DIN

கரோனா பெருந்தொற்றை முறியடிப்போம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.

கரோனா விழிப்புணா்வு குறித்து ஊடகப் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியது:

கரோனா நோய்த்தொற்று தடுப்புப் பணிகளில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. தடுப்பூசி, ஆக்சிஜன் ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க பல்வேறு மாற்று வழிகளை அரசு கையாண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக, மாநிலத்தில் உள்ள மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக 3.5 கோடி தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய உலகளாவிய ஒப்பந்தங்கள் கோரப்பட்டுள்ளன.

ஆக்சிஜன் பற்றாக்குறையைப் போக்க நெதா்லாந்தில் இருந்து திரவ ஆக்சிஜன் கொண்டு வரப்பட்டுள்ளதுடன், சிங்கப்பூரில் இருந்து 1,900 காலி சிலிண்டா்கள் வாங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதில், 500 சிலிண்டா்கள் ஆக்சிஜன் நிரப்பும் மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. மக்களின் நல்வாழ்வில்தான் நாட்டின் எதிா்காலம் அடங்கியுள்ளது. எனவே, அனைவரும் ஒன்றுபட்டு ஒரே குறிக்கோளுடன் செயல்படுவோம். மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தி கரோனா பெருந்தொற்றினை முறியடிப்போம் என்று மு.க.ஸ்டாலின் கூறினாா்.

தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு அனைவரையும் வரவேற்றாா். செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் நன்றி கூறினாா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீடாமங்கலம் சந்தானராமர் கோயிலில் வெண்ணைத்தாழி விழா!

நாட்டரசன்கோட்டையில் பெருமாள் ஆற்றில் இறங்கும் நிகழ்வு!

மறுவெளியீட்டிலும் பிளாக்பஸ்டர்!

கும்பகோணத்தில் சாரங்கபாணி கோயில் தேரோட்டம்

மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயில் தேரோட்டம்

SCROLL FOR NEXT