தமிழ்நாடு

தமிழகத்திற்கு ரெம்டிசிவர் உயர்த்தி ஒதுக்கீடு: பியூஷ் கோயலுக்கு முதல்வர் நன்றி

16th May 2021 08:49 PM

ADVERTISEMENT

தமிழகத்திற்கு ரெம்டிசிவர் மருந்தை உயர்த்தி ஒதுக்கீடு செய்தமைக்காக மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின், மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதினை கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டிற்கு வழங்கி வரும் ரெம்டிசிவர் மருந்து ஒதுக்கீட்டு அளவினை உயர்த்தி வழங்குமாறு மத்திய அமைச்சரிடம் கோரிக்கைவிடுத்திருந்தார். 
இக்கோரிக்கையினை ஏற்று நாளொன்றுக்கு 7000 என்ற அளவில் வழங்கி வந்த ரெம்டிசிவர் மருந்தினை தற்பொழுது நாளொன்றுக்கு 20,000 என்ற அளவில் உடனடியாக உயர்த்தி வழங்கியமைக்காக தன் நன்றியினை முதல்வர் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
கொடிய கரோனா பெரும் தொற்றினை எதிர்த்து போராடிடும் இத்தருணத்தில், குறித்த நேரத்தில் உயிர் காக்கும் மருந்து, ஆக்சிஜன் மற்றும் உபகரணங்கள் ஆகியவற்றின் தேவை இன்றியமையாதது எனவும் தனது கடிதத்தில் மாண்புமிகு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

Tags : Chief Minister Stalin Remdesivir
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT