கரோனா தடுப்புப் பணிகள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
கரோனா தடுப்புப் பணிகள் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
தமிழகத்தில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்து வருகிறது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் கரோனா பரிசோதனை, ஆக்சிஜன் தட்டுப்பாடு, ரெம்டெசிவிர் மருந்து உள்ளிட்டவை குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ம.சுப்ரமணியன், சுகாதாரச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
கரோனா தடுப்பூசி தொடர்பாக உலகளாவிய டெண்டர் குறித்தும் ஆலோசனை நடைபெறுவதாகத் தெரிகிறது.