மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 97.67 அடியிலிருந்து 97.74 அடியாக உயர்ந்தது.
காவிரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 398 கன அடியிலிருந்து 2,146 கன அடியாக அதிகரித்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட குடிநீருக்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிவில் இருந்து மீண்டு மெல்ல உயரத் தொடங்கி உள்ளது.
ஞாயிற்றுக்கிழமை காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.67 அடியிலிருந்து 97.74 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 80 0கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 61.95 டிஎம்சி ஆக உள்ளது.