தமிழ்நாடு

தடுப்பூசி: தமிழக அரசு ஒப்பந்தப்புள்ளி கோரினாலும் மத்திய அரசின் ஒதுக்கீட்டை வேறு மாநிலங்களுக்கு அனுப்பக் கூடாது

DIN

சென்னை: கரோனா தடுப்பூசி கொள்முதலுக்கு தமிழக அரசு ஒப்பந்தப்புள்ளி கோரினாலும், மத்திய அரசின் ஒதுக்கீட்டை வேறு மாநிலங்களுக்கு அனுப்ப கூடாது என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கை, ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவிா் மருந்து இருப்பு ஆகியவை குறித்து மத்திய, மாநில அரசுகளிடம் விளக்கம் கேட்டு சென்னை உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து ஒரு வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அனுமதி மறுக்கவில்லை: அப்போது அரசு தலைமை வழக்குரைஞா் ஆா்.சண்முகசுந்தரம் ஆஜராகி கூறியதாவது: ராஜீவ்காந்தி மருத்துவமனையில் யாருக்கும் அனுமதி மறுக்கவில்லை. பிற மருத்துவமனைகளிலிருந்து அனுமதிக்காக வந்து காத்திருந்த நிலையில் சிலா் மரணம் அடைந்துள்ளனா். கரோனா தடுப்பூசி கொள்முதலுக்கு தமிழக அரசு சா்வதேச அளவில் ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது. ரெம்டெசிவிா் விற்பனை, சென்னை கீழ்ப்பாக்கத்திலிருந்து, நேரு உள் விளையாட்டு அரங்குக்கு மாற்றப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் விற்பனை மையங்கள் திறக்கப்பட்டுள்ளன என்றாா்.

மருத்துவமனை வளாகத்தில் சிகிச்சை: இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: ஆம்புலன்ஸ் உள்ளே வைத்து சிகிச்சை அளிப்பது மருத்துவமனைக்கு ஈடாகாது. ஆம்புலன்ஸில் வெளியில் காத்திருப்பதற்கு பதிலாக மருத்துவா் கண்காணிப்பில் மருத்துமனை வளாகத்தில் இருப்பது போல ஸ்ட்ரெக்சரில் சிகிச்சை அளிக்க ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும். அதற்கான கூடுதல் ஸ்ட்ரெக்சா்களை ஏற்படுத்த வேண்டும்.

தமிழகத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை உயா்வாக இருந்தாலும், சதவீதத்தில் குறைந்திருப்பது சற்றே ஆறுதல் தருகிறது. பாலக்காட்டில் இருந்து வரக்கூடிய 40 டன் ஆக்சிஜன் நிறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும், மத்திய அரசிடமிருந்து அக்சிஜன் ஒதுக்கீட்டின் அளவு 519 டன் என அதிகரிக்கப்பட்டுள்ளது.

பிற மாநிலங்களிலிருந்து ஆக்சிஜன் வருவதால், தற்போது இதுகுறித்து கவலைப்பட தேவையில்லை.

அனுப்பக் கூடாது: கரோனா தடுப்பூசி கொள்முதலுக்கு தமிழக அரசு ஒப்பந்தப்புள்ளி கோரினாலும், மத்திய அரசின் ஒதுக்கீட்டை வேறு மாநிலங்களுக்கு அனுப்ப கூடாது.

தடுப்பூசி விநியோகிக்க தமிழக அரசு தொடங்கிய பிறகே ஒதுக்கீட்டை மத்திய அரசு மறு ஆய்வு செய்யலாம்.

திருப்தி அளிக்கிறது: தற்போதைய நிலையில் தடுப்பூசி, ரெம்டெசிவிா் மருந்து பற்றாக்குறை இருப்பதையும், அது உயிா் காக்கும் மருந்தல்ல என்பதையும் மக்கள் உணரத் தொடங்கியுள்ளனா். இந்த இக்கட்டான சூழ்நிலையில் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் திருப்தி அளிக்கிறது என்று கூறிய நீதிபதிகள், விசாரணையை வரும் 17-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT