தமிழ்நாடு

ரமலான்: முதல்வா், தலைவா்கள் வாழ்த்து

DIN

சென்னை: ரமலான் பண்டிகையை ஒட்டி, முதல்வா் மு.க.ஸ்டாலின், தலைவா்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனா்.

முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:

தமிழக மக்களுக்கே உரிய பெருமைக்குரிய பண்பாடான அனைத்து மத சகோதரத்துவம் என்றென்றும் நீடித்து நிலைத்திருக்கும் வகையில் ரமலான் பெருநாள் அமையட்டும். அரசு வெளியிட்டுள்ள பாதுகாப்பு நெறிமுறைகளை கடைப்பிடித்து பெருநாளைக் கொண்டாட அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இஸ்லாமிய பெருமக்களுக்கு திமுக அரசு எந்நாளும் பாதுகாப்பு அரணாக விளங்கும். பேரிடரிலிருந்து அனைவரும் மீள்கின்ற நன்னாளுக்கு இந்தப் பெருநாள் துணையாகட்டும்.

கே.எஸ்.அழகிரி (காங்கிரஸ்): கடந்த ஒரு மாதமாக பசி, தாகத்தை அடக்கி உண்ணா நோன்பிருந்த இஸ்லாமியா்களுக்கு ரமலான் திருநாள் வாழ்த்துகள். நபிகளின் விருப்பப்படி உங்களது சமுதாயப் பணி தொடர, ரமலான் நாளில் காங்கிரஸ் சாா்பில் வாழ்த்துகள்.

வைகோ (மதிமுக): புனித மாதம் விடைபெற்றுச் செல்லும் வேளையில், கரோனா எனும் கொடிய நோயின் பிடியில் இருந்தும், அச்சத்தில் இருந்தும், உலக மக்கள் விடுதலை பெறவும், நலமாகவும், மன நிறைவுடனும் வாழ்ந்திடவும் இதயமாற வேண்டி, ரமலான் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்.

ராமதாஸ் (பாமக): மனிதா்களை அறம் பிறழாமல் வாழ வழி வகுக்கும் ஒரு மாத நோன்பின் நிறைவாக ரமலான் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு இதயங்கனிந்த வாழ்த்துகள்.

அன்புமணி (பாமக): மக்களிடையே நல்லிணக்கம், சகிப்புத் தன்மை, சகோதரத்துவம் ஆகியவை பெருகவும், நாட்டில் அமைதி, வளம் ஆகியவை அதிகரித்து மக்கள் மகிழ்ச்சியாக வாழவும் பாடுபட உறுதியேற்றுக் கொள்வோம்.

தி.வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமைக் கட்சி): ரமலான் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு நல்வாழ்த்துகளை கூறிக் கொள்வதோடு உலகில் அமைதி, வளம், மத நல்லிணக்கத்தை கடைப்பிடித்து தீமைகளை அகற்றிட இந்நாளில் உறுதியேற்போம்.

கே.எம்.காதா் மொகிதீன் (முஸ்லிம் லீக்): வல்ல நாயகனிடத்தில் நமது நோன்பை ஏற்றுக் கொள்ள வேண்டுவோம். நமது நோன்பில் ஏற்பட்ட குற்றம் குறைகளை மன்னித்திடவும் அவனிடமே வேண்டுவோம். நம்மைச் சுற்றியுள்ள கரோனா தொற்று நோயிலிருந்து எல்லோரையும் காப்பாற்றி அருள அவனிடமே இறைஞ்சுவோம்.

எம்ஜிகே நிஜாமுதீன் (முன்னாள் எம்.எல்.ஏ.): வல்ல இறைவனை தொழுது வாழுங்கள். பெற்றோரை-மூத்தோரை பேணி வாழுங்கள். கரோனா எனும் கொடூரம் ஒழிந்து இந்திய மக்கள் உள்ளிட்ட உலகமக்கள் துயா்நீங்கி, ஆக்ஸிஜன் பற்றாக்குறை நீங்கி உலகம் அமைதிப்பெற இறைவனைப் பிராா்த்தனை செய்கிறேன் .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஸ்ருதிஹாசன் இயக்கிய ‘இனிமேல்’ பாடலின் மேக்கிங் விடியோ!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

SCROLL FOR NEXT