தமிழ்நாடு

காலமானார் முத்துவேலழகன்

DIN

திருச்சி: திருச்சியைச் சேர்ந்த முதுபெரும் நாடகக் கலைஞரும், கார்முகில் புத்தகக் கடை உரிமையாளருமான முத்துவேலழகன்(86) உடல்நலக்குறைவால் காலமானார்.

திருச்சி கருமண்டபம் பகுதியில் உள்ள வசந்த் நகரில் வசித்து வந்த இவர், திருச்சி ஜங்ஷன் பகுதியில் கார்முகில் என்ற பெயரில் புத்தகக் கடை நடத்தி வந்தார். ரயில்வேயில் பணிபுரிந்தவர்.

இளம்வயது முதலே நாடகத்தின் மீது கொண்ட பற்றுதலால், நாடகக் கலைஞராக உருவெடுத்தார். 33-க்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதி இயக்கியுள்ளார். பிரியமுடன் பிரபு என்ற தமிழ்த் திரைப்படத்தில் இணை இயக்குநராகவும் பணியாற்றியவர். இவரது பதினெட்டாம் போர் என்ற நாடகம் பிரசித்தி பெற்றது.

தமிழ் நாடக உலகில் முன்னோடியாகவும் விளங்கிய இவர் தனது வாழ்நாள் முழுவதும் நாடகக் கலைக்காக செலவிட்டவர். கடந்த சில நாள்களாக உடல் நலன் பாதிக்கப்பட்டவர், வெள்ளிக்கிழமை காலை காலமானார். அவருக்கு 2 மகன்கள், 4 மகள்கள், பேரன்கள், பேத்திகள் உள்ளனர்.

தொடர்புக்கு 98945-38863.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடர்ந்து நடிக்க விஜய்யிடம் கோரிக்கை வைத்த விநியோகஸ்தர்: விஜய் கூறியது என்ன தெரியுமா?

அமேதி, ரே பரேலி தொகுதி வேட்பாளர்கள் யார்? வெளியாகிறது ரகசியம்

அறிவுரை லட்சுமி!

குருப்பெயர்ச்சி பலன்கள் - மிதுனம்

பாட்னா ரயில் நிலையம் அருகே கட்டடத்தில் தீ விபத்து

SCROLL FOR NEXT