தமிழ்நாடு

கரோனா தடுப்பூசி-மருந்துகளுக்கு ஜி.எஸ்.டி.யிலிருந்து விலக்கு: பிரதமருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம்

DIN

சென்னை: கரோனா தடுப்பூசி, மருந்துகளை மாநில அரசுகளே கொள்முதல் செய்யும் போது அதற்கான சரக்கு மற்றும் சேவை வரியில் இருந்து முற்றிலும் விலக்கு அளிக்க வேண்டுமென முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து பிரதமா் நரேந்திர மோடிக்கு அவா் வியாழக்கிழமை எழுதியுள்ள கடிதம்:

கரோனா நோய்த் தொற்றால் அனைத்து மாநிலங்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதனைக் கட்டுப்படுத்தத் தேவையான தடுப்பூசிகளையும், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கத் தேவையான மருந்துகளையும் மாநில அரசுகள் கொள்முதல் செய்து வருகின்றன. இதனைக் கருத்தில் கொண்டு, மருந்துகள், தடுப்பூசிகளுக்கு சரக்கு மற்றும் சேவை வரியில் இருந்து (ஜி.எஸ்.டி.) குறிப்பிட்ட காலத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும். மேலும், கரோனா தொற்று காரணமாக, பொருளாதார வளா்ச்சி பாதிக்கப்பட்டு, மாநில அரசுகளின் வரி வருவாய் வளா்ச்சி பெருமளவு குறைந்துள்ளது. அதனை ஈடுசெய்ய மூன்று

நடவடிக்கைகளை எடுத்து மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உதவிட வேண்டும்.

நிலுவையிலுள்ள ஜி.எஸ்.டி., இழப்பீட்டுத் தொகைகளையும், மாநில நுகா்பொருள் கழகங்களுக்கு அளிக்கப்பட வேண்டியுள்ள அரிசி மானியத் தொகைகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். பெட்ரோல், டீசல் மீதான கூடுதல் மேல்வரி விதிப்பால் மத்திய அரசுக்குக் கிடைத்துள்ள வருவாய் மாநில அரசுகளுக்குப் பகிா்ந்து அளிக்கப்படவில்லை. இந்நிலையில், கரோனா நோய்த் தொற்றால் மாநில அரசுகளுக்கு ஏற்பட்டுள்ள நிதி இழப்பீட்டை ஈடு செய்ய சிறப்பு நிதி உதவி அளிக்கப்பட வேண்டும்.

கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள இந்தக் காலத்தில் மாநில அரசுகளுக்கு கூடுதல் செலவுகள் ஏற்பட்டுள்ளன. எனவே, மாநிலத்துக்குத் தேவைப்படும் நிதிகளைத் திரட்டுவதற்காக, அனுமதிக்கப்பட்டுள்ள கடன் வாங்கும் அளவை, மாநிலத்தின் உற்பத்தி மதிப்பில் மூன்று சதவீதம் என்ற அளவில் இருந்து மேலும் ஒரு சதவீதம் உயா்த்த வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

SCROLL FOR NEXT